"நோய் உங்கள் நண்பன்"
பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் தன்னை தானே சீர்படுத்தி/காப்பாற்றி கொள்ளும் நுண்ணறிவோடு(Creative Intelligence) படைத்துள்ளது இயற்கை, இதற்கு மனித உடலும் விதி விலக்கல்ல. பொதுவாக நோய் என்பது நம் உடலின் இயலாமையை/ உடலியக்கத்தின் தோல்வியாகவே மருத்துவ உலகால் பார்க்கப்படுகிறது, ஆனால் இயற்கை தத்துவத்தின் படி நம் உடலில் உள்ள அழுக்குகளை வெளிக்கொணரவும், உடல் மற்றும் உயிர்க்கு ஏற்பட்ட சேதத்தை சரி படுத்தவும், மேலும் சேதம் ஏற்படாமல் தடுக்கவும் உயிர் செய்ய கூடிய அப்பழுக்கற்ற முயற்சி தான் நோய். பெரும்பாலான மருத்துவ முறைகள் அந்த முயற்சியை தடை செய்ய முற்படுகிறதே(Symptomatic Treatment) தவிர அந்த முயற்சி எதற்காக(Root Cause) உயிரால் எடுக்கப்பட்டது என்பதை புரிந்து கொள்ள முயற்சிப்பதில்லை. பொதுவாக வாந்தி, பேதி, சளி மற்றும் வலி போன்றவற்றிற்கு கொடுக்கப்படும் மருந்துகள் அவற்றை மூடி மறைக்கவே(suppressant) கொடுக்கப்படுகிறது, அவற்றை சீர் படுத்த அல்ல, அப்படி மூடி மறைக்க(suppress) செய்யப்படும் முயற்சிகள் உடலில் இருந்து கழிவுகள் வெளிவருவதையும், அந்த நோயை சீர்படுத்த உயிர் செய்யும் முயற்சியையும் தடுத்து அதுவே பின்னாளில் அந்த நோய் வலுப்பெற்று அதே வடிவிலோ வேறு ஒரு நோயாகவோ வெளிப்பட காரணமாக அமைந்து விடுகிறது.
சரி எப்படி நோயில்லாமல் வாழலாம்?
இயற்கை தத்துவத்தின் படி ஆரோக்கியத்தை பெருக்குவதே நோயிலிருந்து விடுபடும் வழி. ஆரோக்கியத்தை பெருக்கும் முயற்சி உடலின் மொழியை புரிந்து அவற்றுக்கு பதிலளிப்பதில் இருந்து தொடங்குகிறது, நான் புரிந்து கொண்ட பத்து கட்டளைகளை உங்களுக்காக பகிர்கிறேன்,

1. பசித்து புசிப்பது.
2. இயற்கையின் தன்மை மாறாத உணவுகளை உண்பது.
3. தாகத்தை உணர்ந்து அதற்கு தகுந்த அளவு தண்ணீர் குடிப்பது.
4. உடல் சோர்வடையும் போது தகுந்த ஓய்வளிப்பது.
5. சரியான அளவு தூங்குவது.
6. சூரிய ஒளி உடலில் பட அனுமதிப்பது.
7. உடலையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருப்பது.
8. உடலின் அனைத்து பாகங்களும் இயங்கும் வகையில் உடற்பயிற்சி செய்வது.
9. செய்யும் வேலையை முழு மனதுடன் செய்வது .
10. மனதை அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்திருப்பது.

No comments:
Post a Comment