Showing posts with label Basics. Show all posts
Showing posts with label Basics. Show all posts

Saturday, October 21, 2017

உபவாசம் (Fasting)

#fasting #space #nature_cure #natural_life_style #arun_sharma #kevin_hinton#health #வெளி #இடைவெளி #வெற்றிடம் #இயற்கை_வாழ்வியல்#இயற்கை_மருத்துவம்
உபவாசம் (Fasting)
Space - வெளி (அ) இடைவெளி (அ) வெற்றிடம் (அ) ஆகாய தத்துவம்!
ஆரோக்கிய வாழ்வை உயிரோட்டமுள்ள ஒரு வாழ்வு என்று கூறகேட்டிருக்கலாம். உயிர் ஓடி கொண்டிருப்பதற்கு வெளி, வெற்றிடம் அவசியம், தொடர்ச்சியாக உணவை திணிக்கும்(Over Eating, Frequent Eating) பொழுது உயிரோட்டம் தடைபடுகிறது, ஆரோக்கியமும் குறைகிறது மாறாக உண்டது செரிமானமான பிறகு, நன்கு பசித்து, தேவையான அளவு மட்டும் உண்ணும் பழக்கம் உடையவர்கள் நல்ல ஆரோக்கியம் பெற்றவர்களாக இருப்பதை பார்க்கலாம்.
ஆரோக்கியத்தை பெருக்கும் முயற்சியில் உபவாசம்(Fasting) மிக முக்கிய பங்கு வகிக்கிறது. தடைபட்டருக்கும் உயிரோட்டத்தை சீர்படுத்துதல் மற்றும் முழுமையான ஓய்வளித்தல்(Complete Resting) மூலம் உபவாசம் ஆரோக்கியத்தை பெருக்குகிறது.
அரசியல் காரணங்களுக்காக உபவாசம்(பட்டினி), ஆன்மீக முன்னேற்றத்திற்கான உபவாசம்(பட்டினி) போன்ற பல காரணங்களுக்காக உபவாசம் கடைபிடிக்க படுகிறது, இவை அனைத்திற்குமே மனோபலம் அவசியமாகிறது, ஆரோக்கியத்தை பெருக்குவதற்கான உபவாசம் மனோபலத்தை(Willpower) கொண்டு செய்யப்படுவதில்லை அதற்கு கீழே கூறப்பட்டிருக்கும் படிகள் அவசியமாகிறது
1. உபவாசம் பற்றிய அறிவியலை புரிந்து கொள்ளுதல்
2. உபவாசம் இருப்பவர்களின் அனுபவங்களை கேட்டறிதல்
3. உபவாசங்களை நிர்வகித்த ஆசிரியரிடம் தொடர்பு ஏற்படுத்தி கொள்ளுதல்
4. உபவாசம் இருப்பதற்கு தயார் படுத்துதல்
5. உபவாச காலத்தை படி படியாக அதிகப்படுத்துதல் (Progressive Fasting)
6. குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை உபவாசம் இருப்பது (Periodic Fasting)
7. தீவிர நோய் காலத்தில் உபவாசம் இருந்து குணபடுத்தி கொள்ளுதல்(Fasting during crisis)
8. உபவாசத்தை முடிக்கும் வழிமுறைகளை கடைப்பிடித்தல்
அன்புடன்,
வினோத் குமார் வி எஸ்

Monday, March 14, 2016

இழந்ததை திரும்ப பெறுங்கள்!



நோயிலிருந்து விடுபட்டு இழந்த ஆரோக்கியத்தை திரும்ப பெறுவது அனைவருக்கும் சாத்தியமாகவே கருதுகிறேன். அந்த முயற்சியில் ஆரோக்கியத்தை அடையும் பாதை பற்றிய தெளிவு , அந்த பாதையில் நாம் காட்டும் ஈடுபாடு, மன அமைதி மற்றும் நோய் பற்றிய பயத்தில் இருந்து விடுபடுவது ஆகியவை அவசியமாகிறது.

Thursday, December 24, 2015

"எதுவுமே செய்யத் தேவையற்ற" இயற்கை மருத்துவம்!


"எதுவுமே செய்யத் தேவையற்ற" வேளாண்மை முறைகளை பற்றி புகோகா பேசுவதன் நோக்கம், உலகில் உள்ள பொருட்களின் இடையே நமது முறையான இடத்தை நாமறிந்து கொள்ள வேண்டும் என எச்சரிக்கத்தான். நாம் இந்த உலகையோ, நம்மையோ உருவாக்கவில்லை. நாம் வாழ்க்கையை பயன் படுத்தி உயிர் வாழ்கிறோம்; உருவாக்கியல்ல.
(ஒற்றை வைக்கோல் புரட்சி புத்தகத்திலிருந்து)
"எதுவுமே செய்ய தேவையற்ற" வேளாண்மையை போன்றது தான் இயற்கை மருத்துவம், நோயை குணப்படுத்த பெரிதாக நாம் எந்த முயற்சியையும் செய்வதில்லை, நோய்க்கான காரணங்களை நீக்குவது, ஆரோக்கிய வாழ்வியலை சாத்தியமாக்குவது ஆகியவை நோயை குணப்படுத்த செய்யும் செயல்கள் போல தோன்றினாலும் அது இயற்கையின் நியதி படி வாழ்வதை அடிப்படையாக கொண்டதே தவிர நோயிலிருந்து விடுபடும் குறுகிய நோக்கத்தோடு செய்ய படுபவன அல்ல.

இயற்கை மருத்துவம் (அ) இயற்கை வாழ்வியல்!

இயற்கை மருத்துவம் (அ) இயற்கை வாழ்வியல் எளிமையான அதே நேரத்தில் மிகவும் நுட்பமான அறிவியல்.
பெரும்பாலான மருத்துவ முறைகள் வெளியிலிருந்து நோயை குணப்படுத்த முயல்கின்றன, இவை தற்காலிக தீர்வையோ அல்லது புதிய நோயை உண்டாக்குபவையாக இருக்கின்றனவே தவிர முழமையான தீர்வு மருத்துவ முறைகளால் சாத்தியபடுவதில்லை. இயற்கை மருத்துவம் (அ) இயற்கை வாழ்வியல் நோயிலிருந்து விடுபட இயல்பாக உள்ளிருந்து உயிர் செய்யக்கூடிய முயற்சிக்கு உதவும் வகையிலான சூழலை உருவாக்குவதை அடிப்படையாக கொண்டது, இயற்கை மருத்துவத்தில் சரியான அணுகுமுறையின் மூலம் அனைத்து நோய்களுக்கும் பக்கவிளைவுகள் இல்லாத முழமையான தீர்வு சாத்தியபடுகிறது.

நோய் காணல் நீரை போன்றது!

அடர்ந்த காடுகளில் வாழும் காட்டுயிர்களும், தாவரங்களும் நோய் பற்றி எதையுமே அறிந்திருக்கவில்லை, அவற்றுக்கு வாழ்வியல் மட்டுமே தெரியும். நோய் காணல் நீரை போன்றது, நோய் பற்றிய குறுகிய பார்வையும், பயமும் அவற்றை உருவாக்குகிறது, தெளிவான பார்வையோடு வாழ்வியலை உற்று நோக்கும் போது நோய் முற்றிலுமாக நம் பார்வையில் இருந்து மறைந்து விடுகிறது.

"நோய் உங்கள் நண்பன்" - உணவு சில கருத்துக்கள்!


1. எந்த ஒரு இலை, காய், கனி, விதை, பருப்பு, தானியம் மற்றும் வேரை சமைக்காமல் அப்படியே உண்ண முடிகிறதோ அவை மட்டுமே தேவையான உணவாக எந்த ஒரு எதிர்வினையும் இல்லாமல் உடலால் ஏற்று கொள்ளப்படும்.
2. அப்படி சமைக்காமல் நம்மால் எவ்வளவு உண்ண முடிகிறதோ அந்த அளவே சரியான அளவாக உடலால் ஏற்று கொள்ளப்படும். சில உணவுகளை வயிர் நிறையும் அளவு உண்ண முடியும், சில உணவுகள் மிகுதியான சுவையின் காரணமாக போதும் என்ற எண்ணம் தோன்ற தொடங்கி விடும்.
3. எந்த ஒரு உணவையும் அதன் இயற்கை தன்மை மாறாமல் ( சமைக்காமல், அரைக்காமல், ..), அல்லது குறைந்த மாறுதல்களுக்கு உட்படுத்தப்பட்டு உட்கொள்ளும் போது அவற்றின் முழுப்பயன்/ அதிகப்படியான பயன் கிடைக்கும்.
4. சமைக்காத உணவை உண்ணும் போது அவற்றில் சத்துக்களை தேடியோ, திட்டமிட்டோ உண்ண வேண்டிய அவசியமில்லை, எந்த ஒரு உணவையும் தவிர்க்காமல், விரும்பும் நேரத்தில்(பசித்து), விரும்பும் அளவில் உணவை உட்கொள்ளலாம்.
5. பசிக்காமல் எந்த ஒரு உணவையும் உட்கொள்ளாமல் இருந்தாலே ஆரோக்கியம் பெருகி, நோய் அகலும். இதையே திருவள்ளுவர்,
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.
என்கிறார். மருந்து அதிகாரத்தில் உள்ள பெரும்பான்மையான குறள்கள் இதையே வலியுறுத்துகின்றன.
6. லேசான சுவையுள்ள, நீர்சத்து அதிகம் உள்ள, எளிமையான உணவுகளையே இயற்கை தத்துவம் சிறந்த நேர்மறை உணவு ( Positive Food) என்கிறது, இத்தகைய உணவுகள் நம் அன்றாட வாழ்வில் அதிகம் இருத்தல் நலம்.
7. உடலுக்கு தேவையான உணவுகள் அதிகம் கொடுக்கும் அதே நேரத்தில் மனதிற்கு பிடித்த உணவுகளையும் சிறிது கொடுத்து வருவது உடலும், மனமும் இணக்கமாக செயல்படுவதற்கு உதவும், அத்தகைய உணவுகளை உட்கொள்ளும் போது அவை சரியாக செரித்து வெளியேறும் வரை பிற உணவுகளை உட்கொள்ளாமல் இருத்தல் நலம்.

கழிவுகளின் தேக்கம் நோய், நீக்கம் ஆரோக்கியம்.

கழிவுகளின் தேக்கம் நோய், நீக்கம் ஆரோக்கியம்.
காற்று, நீர், உணவு ஆகியவற்றில் உடலுக்கு தேவையானவற்றை பெற்ற பின் உள்ளதை கழிவுகளாக மாற்றுவதும், வெளியேற்றுவதும் உடலின் இயல்பு. தவறான உணவு பழக்கங்களும், வாழ்வியல் முறைகளும் உடலிலிருந்து கழிவுகள் சரி வர வெளியேற விடாமல் தேங்க செய்து விடுகின்றன. அப்படி தேங்கிய கழிவுகளை வெளியேற்ற உடல் செய்யும் முயற்சியே நோய் என நாம் அடையாள படுத்துகிறோம்.
நோயிலிருந்து விடுபடுவதற்கும், ஆரோக்கியமான வாழ்விற்கும் கழிவுகளின் நீக்கமே அடிப்படை.
கழிவுகள் தேங்காமல் இருப்பதற்கும், சரி வர நீக்குவதற்கும் செய்ய வேண்டியவை,
1. கழிவுகள் குறைவான உணவை உட்கொள்ளுதல் (பச்சை காய்கறிகள், பழங்கள்,. )
2. வாழ்வியல் முறைகளை சீர்படுத்துதல் (பசித்து புசி, சவைத்து சுவை,. )
3. குறிப்பிட்ட இடைவெளியில் பட்டினி இருப்பது
4. அளவான உடல் உழைப்பு
5. தேவையான ஒய்வு

Cause and Effect!

உடல் தானியங்கும்(Self Managing) திறன் கொண்டது, அது எத்தகைய சூழ்நிலையிலும் நமக்கு உதவ சிறப்பான முயற்சியை மேற்கொள்கிறது. உடலின் அனைத்து செயற்பாடுகளுக்கும்(Effect) காரணமும்(Cause), நோக்கமும்(Reason) உண்டு, சூழ்நிலை சரியில்லாத நேரத்தில் நம்மை காப்பாற்ற உடல் செய்ய கூடிய முயற்சிகளை தான் நோய் என்று அடையாளப்படுத்தி கொண்டிருக்கிறோம்.
நாம் செய்ய கூடிய நோய் தீர்க்கும் முயற்சி காரணங்களை(Cause) களைவதாக இருக்க வேண்டுமே தவிர உடல் ஒரு நோக்கத்தோடு(Reason) செய்ய கூடிய செயலை(Effect) தடை செய்வதாக இருக்க கூடாது

இயற்கை மருத்துவம் ஒரு மருத்துவ முறை அல்ல!

இயற்கை மருத்துவம் ஒரு மருத்துவ முறை அல்ல, மருத்துவ முறைகளுக்கு மாற்றாக இருப்பதாலும், நோயில் இருந்து விடுபட உதவுவதாலும், எளிய மக்கள் மற்றும் புதியவர்கள் எளிதாக புரிந்து கொள்ள ஏதுவாக இருப்பதாலும் மருத்துவம் என்ற வார்த்தை உபயோகபடுத்த பட்டு இருக்கலாம், உண்மையில் அது ஒரு வாழ்வியல் முறை, இயற்கையோடு இணைந்து உடல் மற்றும் மன நலத்தோடு கூடிய நல்வாழ்வை பெற உதவும் வழிமுறைகளின் தொகுப்பு தான் இயற்கை மருத்துவம்.

Cause and Effect!

உணவு மற்றும் வாழ்வியல் பழக்க வழக்கங்களில் நாம் செய்யும் தவறுகளால்(Cause) உடலின் இயல்பு நிலை சீர் குலைகிறது, அந்த சீர்கேட்டிலிருந்து இயல்பு நிலைக்கு திரும்ப இந்த உயிர் செய்யும் முயற்சியை தான் நோய்(Effect) என புரிந்து கொள்கிறோம். நோயிலிருந்து விடுபட செய்யப்படும் முயற்சி நம் தவறான பழக்க வழக்கங்களை சரி செய்வதில் இருந்து தொடங்குகிறது, மாறாக நேரடியாக நோயினை தீர்க்கும் செய்யப்படும் முயற்சிகளால் தற்காலிக நிவாரணம் மட்டுமே சாத்தியப்படும்.

நோயிலிருந்து விடுபடுவதற்கான வழி

நோயுற்ற பிறகு, நோயிலிருந்து விடுபடுவது உடல் இயல்பாக செய்யக்கூடிய ஒரு செயல்.
உடலின் முயற்சிக்கு உதவும் வகையிலான சூழலை உருவாக்குவதன் மூலம் அந்த வேலையை துரிதப்படுத்த முடியும். நல்ல பழக்க வழக்கங்கள், நல்ல உணவு, நல்ல காற்று, சூரிய ஒளி, நல்ல மனநிலை ஆகியவற்றை தகமைத்து(adapt) கொள்வதே நோயிலிருந்து முழமையாக விடுபடுவதற்கான வழி.

வெளிச்சத்தின் குறைவு இருட்டு!

"வெளிச்சத்தின் குறைவு தான் இருட்டே தவிர இருட்டு தனியாக ஒரு பொருள் அல்ல" அதே போல "ஆரோக்கியத்தின் குறைவு தான் நோய், நோய் தனியாக ஒரு பொருள் அல்ல".
எவ்வளவு தீவிரமான நோயாய் இருந்தாலும் நாம் செய்ய வேண்டியது மூன்றே விடயங்கள் தான்
1. நோய்க்கான காரணத்தை நீக்குவது
2. ஆரோக்கியத்தை பெருக்குவது 
3. நோய் விலகி ஓட விடாமல் பிடித்திருக்கும் மனதை நோயிடம் இருந்து பிரிப்பது (அல்லது) மனதிலுருக்கும் நோய் பற்றிய சிந்தனைகள், பயம் மற்றும் கவலையை நீக்கிவது

"நோய் உங்கள் நண்பன்" - நோயற்ற வாழ்விற்கும், நோயிலுருந்து விடுபடுவதற்குமான வழி!

"நோய் உங்கள் நண்பன்" - நோயற்ற வாழ்விற்கும், நோயிலுருந்து விடுபடுவதற்குமான வழி!
மனித உடல் உட்பட பிரபஞ்சத்தின் அனைத்து படைப்புகளும் வெளி(Space), வளி(Air), ஒளி(Light), நீர்(Water), நிலம்(Land) ஆகிய பஞ்சபூதங்களினால் ஆனவை. எப்படி மரத்தினாலான ஒரு உடைந்த நாற்காலியை மரத்துண்டை வைத்து மட்டும் தான் சரியாக சீரமைக்க முடியுமோ, அதே போல பஞ்ச பூதங்களினாலான இந்த உடலையும் அவற்றை கொண்டு மட்டும் தான் சரியான முறையில் சீரமைக்க முடியும். இன்றளவிலும் மனிதன் தவிர்த்த அனைத்து உயிரினங்களும் தங்கள் உடலை நோயிலிருந்து பாதுகாப்பதற்கும், நோயற்ற வாழ்வை வாழ்வதற்குமான தற்சார்பை(Sustainability) பெற்றுள்ளது, மனிதன் சூழல்(Environment) மற்றும் வாழ்வூக்கம் ( Life Instinct) ஆகிய இயற்கை விதிகளிலிருந்து பெருமளவு விலகி சென்றதின் விளைவே இன்று காணப்படும் எண்ணற்ற மருத்துவ முறைகளும் ( Medicinal Systems), மருந்துகளும், ஒன்று தொட்டு ஒன்றாக நோயிலிருந்து விடுபட முடியா செயன்முறை நிலையும்( Recursive State), வாழக்கூடிய சுழலை சரி செய்து கொள்வதன் மூலமும், இழந்த வாழ்வூக்கத்தை( Life Instinct) திரும்ப பெறுவதின் மூலமும் மனிதன் நோயிலிருந்து விடுபட்டு, நோயற்ற வாழ்வை வாழும் தற்சார்பை அடைய முடியும்.

இயற்கையிடம் சரணடைவோம்!

உடலின் சீரிய இயக்கம் ஆரோக்கியம், குறைபாடோடோ, மிகையாகவோ இயங்குவது நோய். உடலின் சீரிய இயக்கம் உள் மற்றும் புற சூழலினால் நிர்ணயிக்கபடுகிறது, நகர வாழ்வில் சிறப்பான இயற்கை உணவை உண்பவர்களும் ஆரோக்கிய குறைபாட்டோடு இருக்கிறார்கள், இயற்கை சூழலில் சிறந்த உணவை உண்ணாமலும் ஆரோக்கியத்தோடு வாழ்பவர்களும் இருக்கிறார்கள், உள் சூழல் நாம் உண்ணும் உணவு, வாழ்வியல் பழக்க வழக்கங்களினால் நிர்ணயிக்கப்படுகிறது, வெளி சூழல் இயற்கையின் கொடை மற்றும் மனிதனின் பொறுப்புணர்ச்சியினால் கட்டமைக்க படுவது. ஆரோக்கிய வாழ்வை வாழும் வாழ விரும்பும் அனைவரும் சிறப்பான வெளிச்சூழலை ஏற்படுத்த உறுதியோடு கைக்கோர்ப்பது அவசியம். இந்த தீப ஒளி திருநாள் நமக்கும் நம் சந்ததியினருக்கும் சிறப்பான எதிர்காலத்தை அருள இயற்கையிடம் சரணடைவோம்.

மருந்தென வேண்டாவாம்!

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.
முன் உண்ட உணவு செரித்த தன்மை ஆராய்ந்து போற்றியப் பிறகு தக்க அளவு உண்டால், உடம்பிற்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை.
No medicine is necessary for him who eats after assuring (himself) that what he has (already) eaten has been digested.

குருடர்களின் கதை!

மருத்துவ அறிவியல் உடலை உணவை கொண்டு இயங்கும் இயந்திரமாக பார்க்கிறது, அதை ஆயிரம் கூறாக்கி ஒவ்வொரு பகுதியையும் தனிமைப்படுத்தி வினையையும், விளைவையும் புரிந்து கொள்கிறது, இது யானையின் உடலை புரிந்து கொள்ள முயற்சித்த குருடர்களின் கதையை போன்றது. இயற்கை மருத்துவம் உடலையும் அதனோடு கூடிய மனத்தையும் ஒன்றாக பார்க்கிறது, அதன் படைப்பு, இயக்கம் ஆகியவற்றை அனுபவ பூர்வமாக இயற்கையின் வழி புரிந்து கொள்கிறது, அதன் மூலம் உடல் மற்றும் மனம் பற்றிய முழுமையான பார்வை சாத்தியமாகிறது.

இயற்கை மருத்துவம்: பட்டினி இருத்தல்.

இயற்கை மருத்துவம்: பட்டினி இருத்தல்.
(நேற்று நண்பர் ஒருவரிடம் பட்டினி இருத்தலை பற்றி பேசி கொண்டிருந்தேன், அந்த உரையாடலின் சாரம் பிறருக்கும் உதவும் என்ற நோக்கில் பகிரப்பட்டுள்ளது)
உடல் உணவால் நிலைபெறவில்லை, மனதிற்கு தான் உணவு அவசியமாகிறது.
அப்படி என்றால் உணவில்லாத வாழ்க்கை சாத்தியமா?
உணவில்லாத வாழ்வை வாழ்வது நமது நோக்கமல்ல, நீண்ட நாட்களுக்கு பட்டினி இருந்த பல இயற்கை மருத்துவர்கள் தங்கள் அனுபவத்தின் மூலம் உணர்ந்ததை கூறி இருக்கிறார்கள்.
அப்படி என்றால் எதற்காக பட்டினி இருக்க வேண்டும்?
பல நேரங்களில் நோய் மற்றும் நோய் நிலைகளில் மீண்டு இயல்பான ஆரோக்கிய நிலையை அடைவதற்கு பட்டினி அவசியமாகிறது, இயற்கை மருத்துவர்கள் பட்டினி இருத்தலை ஒரு கருவியாக மட்டுமே உபயோகிக்கிறார்கள், அதை தேவைக்கேற்ப அளவறிந்து உபயோகிப்பது அவசியமாகிறது.
பட்டினி இருப்பதற்கு எப்படி தயாராக வேண்டும்?
ஆரம்ப நாட்களில் பட்டினியின் தேவையை அறிந்து கொள்வது, பட்டினி பற்றிய புரிதலை பெறுவது, பட்டினி இருந்தவர்களின் அனுபவத்தை அறிவது மற்றும் நிபுணரின் பரிந்துரையின் பேரில் பட்டினி இருத்தல் நலம், பட்டினி பற்றிய புரிதலை அடைந்த பிறகு தனது உள்உணர்வின் அடிப்படையில் பட்டினி இருக்கலாம்.

நோய் உங்கள் நண்பன்

"நோய் உங்கள் நண்பன்"
பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் தன்னை தானே சீர்படுத்தி/காப்பாற்றி கொள்ளும் நுண்ணறிவோடு(Creative Intelligence) படைத்துள்ளது இயற்கை, இதற்கு மனித உடலும் விதி விலக்கல்ல. பொதுவாக நோய் என்பது நம் உடலின் இயலாமையை/ உடலியக்கத்தின் தோல்வியாகவே மருத்துவ உலகால் பார்க்கப்படுகிறது, ஆனால் இயற்கை தத்துவத்தின் படி நம் உடலில் உள்ள அழுக்குகளை வெளிக்கொணரவும், உடல் மற்றும் உயிர்க்கு ஏற்பட்ட சேதத்தை சரி படுத்தவும், மேலும் சேதம் ஏற்படாமல் தடுக்கவும் உயிர் செய்ய கூடிய அப்பழுக்கற்ற முயற்சி தான் நோய். பெரும்பாலான மருத்துவ முறைகள் அந்த முயற்சியை தடை செய்ய முற்படுகிறதே(Symptomatic Treatment) தவிர அந்த முயற்சி எதற்காக(Root Cause) உயிரால் எடுக்கப்பட்டது என்பதை புரிந்து கொள்ள முயற்சிப்பதில்லை. பொதுவாக வாந்தி, பேதி, சளி மற்றும் வலி போன்றவற்றிற்கு கொடுக்கப்படும் மருந்துகள் அவற்றை மூடி மறைக்கவே(suppressant) கொடுக்கப்படுகிறது, அவற்றை சீர் படுத்த அல்ல, அப்படி மூடி மறைக்க(suppress) செய்யப்படும் முயற்சிகள் உடலில் இருந்து கழிவுகள் வெளிவருவதையும், அந்த நோயை சீர்படுத்த உயிர் செய்யும் முயற்சியையும் தடுத்து அதுவே பின்னாளில் அந்த நோய் வலுப்பெற்று அதே வடிவிலோ வேறு ஒரு நோயாகவோ வெளிப்பட காரணமாக அமைந்து விடுகிறது.
சரி எப்படி நோயில்லாமல் வாழலாம்?
இயற்கை தத்துவத்தின் படி ஆரோக்கியத்தை பெருக்குவதே நோயிலிருந்து விடுபடும் வழி. ஆரோக்கியத்தை பெருக்கும் முயற்சி உடலின் மொழியை புரிந்து அவற்றுக்கு பதிலளிப்பதில் இருந்து தொடங்குகிறது, நான் புரிந்து கொண்ட பத்து கட்டளைகளை உங்களுக்காக பகிர்கிறேன்,
1. பசித்து புசிப்பது.
2. இயற்கையின் தன்மை மாறாத உணவுகளை உண்பது.
3. தாகத்தை உணர்ந்து அதற்கு தகுந்த அளவு தண்ணீர் குடிப்பது.
4. உடல் சோர்வடையும் போது தகுந்த ஓய்வளிப்பது.
5. சரியான அளவு தூங்குவது.
6. சூரிய ஒளி உடலில் பட அனுமதிப்பது.
7. உடலையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருப்பது.
8. உடலின் அனைத்து பாகங்களும் இயங்கும் வகையில் உடற்பயிற்சி செய்வது.
9. செய்யும் வேலையை முழு மனதுடன் செய்வது .
10. மனதை அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்திருப்பது.

Tuesday, December 22, 2015

Cause & Effect!

உணவு மற்றும் வாழ்வியல் பழக்க வழக்கங்களில் நாம் செய்யும் தவறுகளால்(Cause) உடலின் இயல்பு நிலை சீர் குலைகிறது, அந்த சீர்கேட்டிலிருந்து இயல்பு நிலைக்கு திரும்ப இந்த உயிர் செய்யும் முயற்சியை தான் நோய்(Effect) என புரிந்து கொள்கிறோம். நோயிலிருந்து விடுபட செய்யப்படும் முயற்சி நம் தவறான பழக்க வழக்கங்களை சரி செய்வதில் இருந்து தொடங்குகிறது, மாறாக நேரடியாக நோயினை தீர்க்கும் செய்யப்படும் முயற்சிகளால் தற்காலிக நிவாரணம் மட்டுமே சாத்தியப்படும்.

Fair Use!

பயன்படுத்தாத பொருள் பயனற்றதாகிறது, அதிகமாக பயன்படுத்தும் பொருள் தேய்மானம் அல்லது சேதாரம் அடைகிறது. இந்த உடலின் தேவை மற்றும் முக்கியத்துவம் அறிந்து அளவாக பயன்படுத்தும் போது ஆரோக்கிய வாழ்வு சாத்தியமாகிறது, குறைவாகவோ, மிகையாகவோ பயன்படுத்தும் போது நோய் வாய்படுகிறோம்.