இயற்கை மருத்துவம் - சூழலும், ஆரோக்கியமும்!
ஆரோக்கியத்தை திரும்ப பெரும் முயற்சியில் நாம் வாழுக்கூடிய சூழல் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நல்ல காற்று, நல்ல நீர், நல்ல சூரிய ஒளி என்பதை தாண்டி நாம் வாழும் சூழலின் ஒட்டு மொத்தமாக இயற்கையின் செயல் திறன் (Nature's Activity) என்பது மிக முக்கியமாக இருக்கிறது. நல்ல காற்று, நல்ல நீர், நல்ல சூரிய ஒளி என்பது அந்த சூழலின் அங்கங்கள் மட்டுமே, சூழலின் பன்முக தன்மை, பல விதமான உயிர்கள் வாழ்வதற்கான சாத்திய கூறுகள்(Bio Diversity), நல்ல மனிதர்கள், அமைதி, அந்த சூழலுக்கு முரண்படாத வாழ்க்கை முறை போன்ற பல்வேறு அம்சங்கள் நோயிலிருந்து விடுபடும் முயற்சியை துரித படுத்துகிறது.
அந்த வகையில் வனம், காடு, நதி, கடல், மலை போன்றவற்றோடு நாம் கொண்டிருக்கும் தொடர்பு மற்றும் இவற்றோடு தொடர்புடைய எளிமையான வாழ்க்கை முறை ஆரோக்கியத்தை திரும்ப பெரும் முயற்சியின் மிக முக்கிய அம்சங்களாக நான் நம்புகிறேன்.
No comments:
Post a Comment