1. ஒருவர் எப்படி நோய் வாய்படுகிறார்?
தீதும் நன்றும் பிறர் தர வாரா என்ற வரி தான் இதற்கு விடை, நோயும், ஆரோக்கியமும் பிறர் தர வருவதில்லை, நாம் எப்படி வாழ்கிறோம் என்பதின் விளைவாக நோயோடோ, ஆரோக்கியத்தோடோ இருக்கிறோம்.
2. அப்படி என்றால் வாழும் முறைகளில் மாற்றம் கொண்டு வந்தால் நோயில்லாமல் வாழ முடியுமா?
நிச்சயமாக. நாம் உண்ணும் உணவு, குடிக்கும் தண்ணீர், சுவாசிக்கும் காற்று, வாழும் சூழல், உடுத்தும் உடை, பயன் படுத்தும் பொருட்கள், உடல் உழைப்பு, ஓய்வு, மன நிலை முதலியவற்றின் தரம் நம் ஆரோக்கியத்தை நிர்ணயிக்கிறது. இவையனைத்தும் சிறப்பாக இருக்கும் போது உடல் ஆரோக்கியமாக நிலையில் உள்ளது, வெளி சூழலால் ஏற்படும் சிறு சிறு உபாதைகள் கூட விரைவில் சரி செய்யப்பட்டு மீண்டும் ஆரோக்கிய நிலைக்கு உடல் திரும்பி விடுகிறது.
3. உபாதைகள் எப்படி சரி செய்யபடுகிறது, அதற்கு எதாவது மருந்து உள்ளதா?
உடல் சிறப்பாக இயங்க தேவையான அனைத்துமே அதனுள்ளே இருக்கிறது, குறிப்பாக மருந்து என்ற எதுவும் தேவையில்லை, இருந்தாலும் நோயின் தன்மை மற்றும் தீவிரத்திற்கு ஏற்ப இயற்கை மருத்துவரின்/ வாழ்வியல் நிபுணரின் வழி காட்டுதலை கடைபிடிப்பது அவசியம்.
No comments:
Post a Comment